பாண்டவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணர் தூது சென்று விஸ்வரூபம் எடுத்த காட்சியைக் காண வேண்ட, ஜனமேஜயனும், ஹாரீத முனிவரும் இத்தலத்திற்கு வந்து தவம் செய்ய, பகவான் விஸ்வரூபக் காட்சியைக் காட்டியருளினார். அதனால் இந்த ஸ்தலம் 'திருப்பாடகம்' என்ற பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
மூலவர் பாண்டவ தூதர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். மிகப்பெரிய திருவுருவம். ருக்மிணி, ஸத்யபாமா என்று இரண்டு தாயார்கள். ஜனமேஜயனும், ஹாரீத முனிவருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
இந்த ஸ்தலத்திற்கு எம்பெருமானார் எழுந்தருளி இருக்கிறார். மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.
திருமங்கையாழ்வார் 2 பாசுரங்களும், திருமழிசையாழ்வார் 2 பாசுரங்களும், பூதத்தாழ்வார் ஒரு பாசுரமும், பேயாழ்வார் ஒரு பாசுரமுமாக மொத்தம் 6 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|